• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பெரும்பாலானோர் சோகமாக எழுவதாக ஆய்வில் தகவல்

Byவிஷா

Mar 17, 2025

நாளுக்கு நாள் பெருகி வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடு காரணமாக, சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் பெரும்பாலானோர் சோகமாக எழுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Wakefit.co வெளியிட்ட ‘The Great Indian Sleep Scorecard’ (GISS) 2025 அறிக்கையின் படி, தூக்கமின்மை இந்தியர்களுக்கிடையே தொடரும் முக்கியக் பிரச்சனையாக உள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான காலக்கட்டத்தில் 4,500க்கும் மேற்பட்ட பதில்களை கொண்ட கணக்கெடுப்பில், அதிகமான டிஜிட்டல் பயன்பாடு மற்றும் உடல், மன ஆரோக்கியத்தின் மீது ஏற்படும் தாக்கங்கள் உள்ளிட்டவை இரவு நேர தூக்கங்களை அதிகமாக பதிப்பதாக தெரிவித்துள்ளது.
தூக்க பழக்கங்களில் கவலைக்குரிய மாற்றங்கள்: GISS 2025 அறிக்கையின் படி, பெரும்பாலான இந்தியர்கள் பரிந்துரைக்கப்பட்டதை விட தாமதமாக உறங்குகின்றனர். கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 58சதவீதம் பேர் இரவு 11 மணிக்குப் பிறகு தூங்குவதாகக் கூறியுள்ளனர், இது தூக்கத்திற்காக பரிந்துரைக்கப்படும் 10 மணிநேரத்தை விட குறைவு ஆகும். மேலும், 44சதவீதம் பேர் காலை எழுந்தவுடன் புத்துணர்ச்சியில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது மோசமான தூக்கத் தரத்தைக் குறிக்கிறது.
கணக்கெடுப்பில் 35சதவீதம் பேர் மன அழுத்தம் மற்றும் எதிர்காலத் தடைகளை எண்ணி இரவில் விழித்திருப்பதாக கூறியுள்ளனர், இது தூக்கமின்மை அதிகரிக்க காரணமாகிறது. பாலினம் மற்றும் பிராந்தியத்தால் தூக்கத்தின் மீது ஏற்படும் தாக்கம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தூக்கத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெண்களில் 59சதவீதம் பேர் இரவு 11 மணிக்கு மேல் உறங்குகிறார்கள், அதே சமயம் 50சதவீதம் பேர் காலையில் சோர்வாக உணர்கின்றனர். இந்த கணக்கீடு ஆண்களுடன் (42சதவீதம்) ஒப்பிடும்போது அதிகமாகும்.

பல்வேறு நகரங்களில் தூக்க முறைகளில் வேறுபாடு காணப்படுகிறது. கொல்கத்தாவில் 72.8மூ பேர் இரவு 11 மணிக்குப் பிறகு உறங்குகின்றனர், இது மிக உயர்ந்த சதவீதமாகும். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இது 55சதவீதம் ஆக, குறைந்த அளவில் உள்ளது. மேலும், கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களில் அதிகமானோர் காலையில் எழும்போது (56சதவீதம்) புத்துணர்ச்சி இல்லாமல் கூறியுள்ளனர்.
தொலைபேசி பயன்பாடு மற்றும் தூக்க தரம்: தொலைபேசி பயன்பாடு தூக்க தரத்தை நேரடியாக பாதிக்கிறது. கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 84சதவீதம் பேர் படுக்கைக்கு செல்லும் முன்பு தொலைபேசி பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். இது தூக்கத்தைக் குறைக்கும் ஒரு பழக்கமாகிறது. மேலும், 51சதவீதம் பேர் சமூக ஊடகங்களில் ஸ்க்ரோலிங் செய்வது மற்றும் தொடர் நிகழ்ச்சிகள் பார்ப்பது தாமதமாக விழித்திருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
25-30 வயதுக்குட்பட்டவர்களில் 90சதவீதம் பேர் தூக்கத்திற்கு முன்பு தொலைபேசியை அதிகமாக பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். குறிப்பாக, குருகிராம் (94சதவீதம்) மற்றும் பெங்களூரு (90சதவீதம்) ஆகிய நகரங்களில் இந்த நடைமுறை அதிகமாக உள்ளது.
தூக்கமின்மையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்: கணக்கெடுப்பு முடிவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 51-58சதவீதம் பேர் தாமதமாக தூங்குவதாகக் கூறியுள்ளனர். மேலும், 33சதவீதம் பேர் தங்களுக்கு தூக்கமின்மை இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். தூக்கமின்மையின் நீண்டகால விளைவுகளாக காலை எழுந்தவுடன் சோர்வு, வேலை நேரத்தில் மயக்கம் போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.
தூக்க தரத்தை மேம்படுத்த வழிகள்: தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. 38சதவீதம் பேர் படுக்கைக்கு முன்பு திரை நேரத்தைக் குறைப்பது தூக்கத்தை மேம்படுத்த உதவும் என நம்புகின்றனர். மேலும், 31சதவீதம் பேர் ஒழுங்கான தூக்க அட்டவணையைப் பேண முக்கிய முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
Wakefit.co நிறுவனத்தின் இணை நிறுவனர் சைதன்யா ராமலிங்கேகவுடா கூறுகையில், “டிஜிட்டல் பழக்கவழக்கங்களும் பணி அழுத்தங்களும் வாழ்க்கை முறையை தொடர்ந்து மாற்றியமைக்கும் நிலையில், தூக்கத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. ‘தி கிரேட் இந்தியன் ஸ்லீப் ஸ்கோர்கார்டு’வின் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறந்த தூக்க முறைகளைத் தேர்வு செய்ய ஊக்குவிக்கவே நாம் எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார்.

நிபுணர் ஆலோசனை: கொச்சின் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர், டாக்டர் ராஜீவ் ஜெயதேவன், தூக்கமின்மை பிரச்சினை எதிர்கொள்ளும் நபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அவரது பரிந்துரைகளின்படி:
அதிகாலையில் தூக்கம் குறைவாக இருந்தால், விடுமுறைக் காலங்களில் உங்கள் இயற்கை தூக்க முறைகளை கவனித்து சராசரி நேரத்தை கணக்கிடலாம்.
நல்ல தூக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்க, படுக்கையறையின் ஒளி, இரைச்சல், வெப்பநிலையை சரிசெய்ய வேண்டும்.
தினசரி 6-8 மணிநேரம் உறங்குவதற்கான முயற்சி அவசியம்.
இந்த முடிவுகள் தூக்க ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியதைக் காட்டுகின்றன. தூக்கத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பான முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.