நாகப்பட்டினம் மாவட்டம், அவுரி திடலில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது. அவன் ஒரு பகுதியாக நாகை அவுரி திடலில் மாணவர் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய கல்விக் கொள்கையை கண்டித்தும், தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை கண்டித்து மாணவ கூட்டமைப்பினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஹிந்தி மொழிக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஒன்றிய அரசுக்கு மாணவ மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.