அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், அரசு ஊழியர் சங்கத்தினர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து பங்கேற்றனர்.