புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ரெகுநாதபட்டி அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கல்விச் சுற்றுலாவாக 2600 ஆண்டு பழமை வாய்ந்த தமிழரின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் நிறைந்த கீழடி அகழ்வாராய்ச்சி அருங்காட்சியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

கற்கால மனிதர்கள் வாழ்வியல் முறை, சங்க இலக்கியங்களின் எடுத்துக்காட்டு சுவடுகளை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் ரோட்டரி சங்கத் தலைவர் சுதாகரன் தலைமை வைத்தார், செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ரமேஷ், ஆகியோர் முன்னிலையில் வைத்தனர், முன்னாள் தலைவர்கள் மணிகண்டன் மணிகண்டன், முரளிதரன், ஆறுமுகம், வழக்கறிஞர் வாசிம், தலைமையாசிரியர் நாகலட்சுமி, ஆசிரியை மணிமேகலை, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வடிவுக்கரசி, பள்ளியின் மேலாண்மை குழு தலைவி பொன்னம்மாள் மற்றும் கார்த்திகா ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.