குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் பெறுவதற்காக 40 மாணவர்கள் மணிக்கட்டை வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் உள்ள மோட்டா முன்ஜியாசர் தொடக்கப்பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களைத் தாங்களே மணிக்கட்டை வெட்டி காயப்படுத்திக் கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சக மாணவன் ஒருவன் பணத்திற்காக மணிக்கட்டை வெட்டும்படி தூண்டியதால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோ கேமால் ஈர்க்கப்பட்ட அந்த மாணவன் இந்த விபரீத விளையாட்டை விளையாடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியது.
பகசாராவைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவன் பென்சில் ஷார்பனர் பிளேடால் கைகளை வெட்டி கொண்டால் ரூ.10 தருவதாக கூறியுள்ளார். மேலும் இந்த செயலை செய்ய மறுக்கும் மாணவர்கள் தனக்கு ரூ.5 தரவேண்டும் என ஏமாற்றியுள்ளார். இதனால் பல மாணவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என முயற்சியில், தங்களை தாங்களே காயப்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கிராமத் தலைவர் மற்றும் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து விசாரணை தொடங்கவுள்ளதாக பகசாரா காவல் துணை ஆய்வாளர் தெரிவித்தார். மோட்டா முன்ஜியாசர் தொடக்கப்பள்ளியின் முதல்வர் மக்வானா, குழந்தைகள் வீடியோ கேமைப் பின்பற்றி இந்தச் செயலில் ஈடுபட்டதாக கவலை தெரிவித்தார்.
இந்த சம்பவம் ப்ளூ வேல் சேலஞ்ச் போன்ற ஆபத்தான ஆன்லைன் கேமுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு ப்ளூ வேல் சேலஞ்ச் விளையாட்டை விளையாடிய பலர் தற்கொலை செய்து கொண்டதும், பலர் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாகவும், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த சம்பவத்திற்கு ப்ளூ வேல் சேலஞ்ச் வழிவகுத்ததா என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
பணத்துக்காக மணிக்கட்டை வெட்டிக் கொண்ட மாணவர்கள் : ஆன்லைன் கேம் விபரீதம்













; ?>)
; ?>)
; ?>)