சோழவந்தான் அருகே தேனூர் பகுதியில் போக்குவரத்து துண்டிப்பால் மாணவ மாணவிகள் அலைக்கழிப்பு செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேலூர் சேம்பர் உள்ளிட்ட பகுதிகளில் மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் பணிகள் நடைபெறுவதை காரணமாக கூறி மேலக் கால் வைகை பாலம் முதல் சமயநல்லூர் வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக தேனூர் வைகை ஆற்றின் கரையோரம் பணிகள் நடந்து வருவதால் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் போக்குவரத்து சமயநல்லூர் முதல் மேலக் கால் வைகை பாலம் வரை தடை செய்யப்பட்டு இரண்டு புறத்திலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேனுர் பகுதியில் இருந்து மதுரை மற்றும் வாடிப்பட்டி திருமங்கலம் சோழவந்தான் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் முன்னறிவிப்பு செய்து அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் அவசரகதியில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள அதிகாரிகளிடம் கூறினால் எதைப் பற்றியும் அவர்கள் கண்டுகொள்ளாமல் பணிகளை தொடர்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
தேனூரில் போக்குவரத்து துண்டிப்பால் மாணவ மாணவிகள் அலைக்கழிப்பு..!








