• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாணவர்கள் தற்கொலை …72 மணி நேரம் மிக முக்கியம்

ByA.Tamilselvan

Sep 8, 2022

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவர்களின் தற்கொலை தடுக்க முதல் 72 மணி நேரம் மிக முக்கியமானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலையை தடுக்க சில வழிமுறை பின்பற்ற வேண்டும். மாணவர்கள் மனம் தளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காமல் போனால் தங்களை அறியாமலேயே அவர்கள் தவறான முடிவு எடுக்கலாம். இதனால் தேர்வு முடிவு வெளியான முதல் 72 மணிநேரம் மிக முக்கியம் என்று மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அப்போது மாணவர்களை மனம் தளராமல் பார்த்துக்கொள்வது பொற்றோரின் கடமை அந்த நேரத்தில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பது மிக அவசியம்.