• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கோவையில் கல்லூரிகளில் சீட் பிடிக்க மாணவர்கள் ஆர்வம் !!!

BySeenu

May 8, 2026

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், கோவையில் உள்ள முன்னணி கல்லூரிகளில் உயர் கல்விக்கான சேர்க்கை ‘களை’கட்டி உள்ளது.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, மாணவ, மாணவிகள் தங்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கக் கல்லூரிகளில் குவியத் தொடங்கி உள்ளனர்.

​கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இன்று முதலே விண்ணப்ப விநியோகம் மற்றும் முன்பதிவு (Registration) பணிகள் விறுவிறுப்பாகத் துவங்கின. மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியலைக் கொண்டு, பெற்றோர்களுடனும் நண்பர்களுடனும் கல்லூரிகளுக்கு நேரில் வந்து தங்களுக்குப் பிடித்தமான பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்து வருகின்றனர்.

குறிப்பாக பி.காம் (B.Com), பி.எஸ்சி ஐ.டி (B.Sc IT) மற்றும் நவீன தொழில்நுட்பப் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது.

​மாணவ, மாணவிகளின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், பல கல்லூரிகளில் பிரத்யேக ‘உதவி மையங்கள்’ (Help Desks) அமைக்கப்பட்டு உள்ளன. இதில், மாணவர்கள் பெற்று உள்ள மதிப்பெண்களுக்கு ஏற்ப எந்தப் பாடத் திட்டம் அவர்களுக்குச் சிறப்பாக இருக்கும், எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி ? இருக்கும் என்பது குறித்துக் கல்வி ஆலோசகர்கள் விரிவான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகத்துடன் கோவையில் கல்லூரிகளில் குவிந்து வருகின்றனர்.