• Sun. Apr 28th, 2024

மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல்..,

Byவிஷா

Jul 6, 2023

திருமங்கலத்தில் பூவரசம் மரத்தின் பழக்கொட்டையை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து மருத்துவரிடத்தில் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து, பெற்றோர் இடத்தில் ஆறுதல் கூறினார்.
பள்ளி மாணவர்களிடம் உடல்நிலை கேட்டறிந்தார் தொடர்ந்து, இது போன்றவற்றை சாப்பிடக்கூடாது மிகவும் கவனமாக இருக்கணும். மற்றவர்கள் கூறினாலும் அதை யோசித்துப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறினார். அதனைத் தொடர்ந்து பிஸ்கட், ரொட்டி, பழங்கள், நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளாகள் சந்திப்பில் கூறியதாவது..,
திருமங்கலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் புதன்கிழமையன்று பள்ளி வளாகத் துக்குள் உள்ள பூவரசம் மரத்தின் பழக் கொட்டைகளை சாப்பிட்டனர். பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்ற அவர்கள் அங்கு மயக்கம் அடையத் தொடங்கினர். உடனடியாக பெற்றோர்கள் அவர்களை திருமங்கலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். தரணித ரன், ஸ்ரீபாலாஜி, கோகுல பிரசாத் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் ஒன்றன்பின் ஒன்றாக வந்து சேர்ந்தனர். இவர்களில் மாணவர்கள் ஸ்ரீபாலாஜி, கோகுலபிரசாத் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவ அதிகாரிடம் சிகிச்சை குறித்து கேட்கப்பட்டது தொடர்ந்து மாணவர்களுக்கு தனிக்கனவனம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *