• Sun. Apr 28th, 2024

திமுக 3600 கோடி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்துள்ளது…! ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..,

கருணாநிதி காலம் தொட்டு ஸ்டாலின், உதயநிதி காலம் வரை விஞ்ஞான ரீதியாக ஊழல் தொடர்ந்து திமுக மீது மக்களிடத்தில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் படும் வேதனையின் களநிலவரம் ஸ்டாலினுக்கு தெரியாதா? என்ற கேள்வியை எழுப்பி குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசினோம். 

வருமான வரி சோதனைகளில் சார் பதிவாளர் அலுவலகங்களிலே 3,000 கோடி அளவில் கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில்  ஆன்லைன் பத்திரப்பதிவு ,சிசிடிவி கேமரா கண்காணிப்பு,  என்று பல விவரங்களை அரசு தங்களுடைய சாதனையாக பறைசாற்றி கொள்கிறது.ஆனால் 3,000 கோடி அளவில்  கணக்கு காட்டாமல் சார் பதிவாளர் அலுவங்களில் கண்டு பிடிக்கப்பட்டபோது மக்களிடத்தில் அரசின் மீது மிகப்பெரிய அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  

கருணாநிதி

திமுகவின் அந்த காலத்தை எடுத்துக் கொண்டால் கருணாநிதி காலம் தொட்டு ஸ்டாலின், உதயநிதி வரை விஞ்ஞான ஊழல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பூச்சி பேரல் ஊழல், 2ஜி ஊழல் நடைபெற்றது. இதை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக திருந்தி இருப்பார்கள் என்று வாக்களித்த மக்களுக்கு இன்றைக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஸ்டாலின்

 திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிதியமைச்சர் ஆடியோ பதிவில்  30,000 கோடியை எங்கே வைப்பது என்று தெரியாமல் ஸ்டாலின் மகனும், மருமகனும் தத்தளித்து கொண்டிருப்பது என்கிற ஒரு செய்தி தமிழ்நாட்டு மக்களிடத்திலே ஒரு அதிர்வலை ஏற்படுத்தியது, அதைத்தொடர்ந்து வருமானவரித்துறையும், அமலாக்க துறையும் சோதனை செய்ததில் செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு கொடுக்காமல் உள்ளார் குற்றச்சாட்டு உள்ளது.

ஒரு பாட்டிலுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூபாய் வீதம், ஒரு கோடி மதுபான பாட்டில் விற்பனையில் ஒரு நாளைக்கு 10 கோடி என்ற அளவிலே, மாதத்திற்கு 300 கோடி ரூபாய், வருடத்திற்கு 3600 கோடி ரூபாய் என்கிற அளவிலே அந்த ஊழல் விவகாரங்கள் இன்றைக்கு சிரியாய் சிரித்துக் கொண்டிருக்கிறது .

 ஒரு வங்கியில் வருமானவரித்துறை ஆய்வு செய்கிறார்கள் அங்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கணக்கிலே வங்கியில் கணக்கில் காட்டப்படாத பணம் இருக்கிறது .அது யாருடைய பணம் என்று மிகப்பெரிய கேள்விக்கு விடை தெரியாமல் இருக்கிறார்கள்.  

செந்தில் பாலாஜி

30 ஆயிரம் கோடி கணக்கில் காட்டாத பணம்,மதுபானத்தில் ஆண்டுக்கு 3,600 கோடி என விஞ்ஞான ஊழலாக உள்ளது.இதை சற்று பின்னோக்கி பார்த்தால் கருணாநிதியின் சர்க்காரிய ஊழலில், 20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை காணவில்லை என்று சொல்லுகிற போது, சர்க்கரையை எறும்பு சென்று விட்டது என்றும், அந்த காலி சாக்கை எலி கடித்து விட்டது என்று கூறிய போது நீதிமன்றமே  இது விஞ்ஞான ரீதியில் ஊழல் என்று தீர்ப்பு கூறியது.

 நேற்று முன் தினம் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை அமைச்சர்  மதுரையிலே  பல்வேறு ஆய்வு பணிகள் செய்து,அதில் மதுரையில் உயர் நீதிமன்றம் கிளை அமைத்தது கருணாநிதி போட்ட பிச்சை என்று கூறுகிறார். கருணாநிதியின் அரசிலே அடித்த கொள்ளையை, அடித்த ஊழலை இந்த நாடே சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது அதற்கு உரிய விளக்கத்தை தெரிவிப்பதற்கு அமைச்சர் முன்வரவில்லை.

 அதேபோல் ஆர்.எஸ்.பாரதி பட்டியல்இன மக்களுக்கு உயர் நீதிமன்றத்தில் நீதி அரசராக நியமித்து கருணாநிதி போட்ட பிச்சை என்று என்று கூறி அது மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டது.

 ஒரு அமைச்சர் பெண்களுக்கு இலவச பேருந்தை ஓசி பஸ் என்றும், பெண்களுக்கு வழங்கப்போகும் ஆயிரம் ரூபாய் தொகையை மூத்த அமைச்சர் கொச்சைப்படுத்தியும்,  அமைச்சரிடம் மனு கொடுக்க வந்த பெண் மீது மனுவை தலையில் அடிப்பதும், ஒரு அமைச்சர் தொண்டர்கள் மீது கல் வீசி எறிவதும் உள்ளது. வளர்ச்சிக்கான திட்டங்களை எதுவும் செய்யவில்லை.

இன்றைக்கு விலைவாசி விண்ணை மூட்டுகிறது. மக்கள் பசி தீர்க்க அக்கறை இல்லாத அரசாக உள்ளது.இதை தான் மாமன்னம் படம் ஓடினால் என்ன ,ஓடாவிட்டால் என்ன மக்களின் பசியாய் தீர்க்க போகிறது என்று எடப்பாடியார் உரிமை குரல் எழுப்பினார்

இன்றைக்கு தக்காளி, காய்கறி, அரிசி,பருப்பு இதையெல்லாம் விலையேற்றம் அதிகமாக உள்ளது இந்த களநிலவரத்தை முதலமைச்சர் காது கொடுத்து கேட்க மறுக்கிறார். 

ஊழல் சாம்ராஜ்யத்தில் இருந்து மக்களை காப்பாற்ற எடப்பாடியார் போர்க்குரல் எழுப்பி வருகிறார். இன்றைக்கு நிர்வாகம் எல்லாம் ஸம்பித்து போய் உள்ளது முதலமைச்சர் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்.

 அமைச்சர்கள் எல்லாம் உளரல் பேச்சுக்கு வாய்பூட்டு போடும் முதலமைச்சரே, ஒரு விழாவில் நான் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது கெட்டதை தைரியமாக செய்தேன் என்று கூறுகிறார். இன்றைக்கு மக்கள் தான் முதலமைச்சருக்கு வாய் பூட்டு போட வேண்டும்.

இன்றைக்கு தங்கள் பேசுவது தான் சட்டமாக உள்ளது என்கிறார்கள். உண்மைமறைக்கப்படுகிறது, நியாயம் மறைக்கப்படுகிறது, தோல்வி மறைக்கப்படுகிறது, இயலாமை மறைக்கப்படுகிறது ,நிர்வாக குளறுபடி மறைக்கப்படுகிறது.

எடப்பாடியாரின் கருத்தை மக்கள் வலுப்படுத்த வேண்டும் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் வீர விழா வெற்றி மாநாடு புதிய சரித்திரம் படைக்கும் எனகூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *