• Sat. May 4th, 2024

மருந்தே உணவு உணவே மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் நடத்திய விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி!

ByNeethi Mani

Jul 6, 2023

ஜெயங்கொண்டத்தில் மத்திய அரசின்  தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில்.மத்திய அரசு நலத்திட்டங்களுக்கான சத்தான உணவுகளை உட்கொண்டு  உடல் நலத்தைப் பேனா வலியுறுத்தி விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

மத்திய அரசின்  தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மத்திய மக்கள் தொடர்பகத்தின் திருச்சி அலுவலகம் சார்பில், ஜெயங்கொண்டத்தில் மத்திய அரசு நலத்திட்டங்களுக்கான சத்தான உணவுகளை உட்கொண்டு  உடல் நலத்தைப் பேனா வலியுறுத்தி விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. மத்திய மக்கள் தொடர்பக இயக்குநர்  காமராஜ் தலைமை வகித்து பேசுகையில். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை எனும் லைப் திட்டம் சூழலியல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதன் மூலமாக பூமிப்பந்தின்  ஆயுட்காலத்தை நாம் அதிகரிக்க இயலும். சிறுதானியங்கள் நமது பாரம்பரிய உணவு வகைகளாக இருந்தது, இதன் காரணமாக நமது முன்னோர்கள் தங்கள் ஆரோக்கியத்தை  கட்டிக்காக்க முடிந்தது  இன்றைய தலைமுறையினரின் துரித உணவுப் பழக்கங்கள் காரணமாக சிறு வயதிலேயே பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகினர் ,இது போன்ற விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சிகள் வாயிலாக, பல்வேறு தரப்பட்ட மக்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்கள் குறித்து மாணவ மாணவியர் அறிந்து கொள்வதோடு இது குறித்த தகவல்களை தங்கள் உற்றார் உறவினருக்கும், ஏனைய நண்பர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.புகைப்படக் கண்காட்சியானது, மாநிலம் முழுவதும் பல  இடங்களில் நடத்தப்படுகின்றன, யோகா, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை, சர்வதேச சிறுதானிய ஆண்டு, மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அந்தந்த மாதங்களில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய நாட்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை  கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன  இதன் மூலம் அறியப்பெறும்  தகவல்களை மாணவ மாணவியர், பொதுமக்கள் அறியும் வகையில் இருக்கும், 2021-ஆம் ஆண்டு இந்திய அரசு விடுத்த வேண்டுகோளையடுத்து, ஐக்கிய நாடுகள்  சபை இந்த 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.  சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்ற அடிப்படையில், தண்ணீர் சேமிப்பு, எரிபொருள் சேமிப்பு, நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார். சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்து பேசுகையில்.
அரியலூர் மாவட்டத்தில், சிறுதானிய விளைச்சலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டு உடல்நலத்தை பராமரிக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்திருப்பது அவசியம் என்றும் அதன் வாயிலாக இந்தத் திட்டங்களின் பலன்களை அனைவரும் பெற முடியும் என்று கூறினார். முன்னதாக மத்திய மக்கள் தொடர்பக திருச்சி அலுவலக களவிளம்பர அலுவலர்  தேவி பத்மநாபன் வரவேற்றார். அரியலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மோகன் பேசுகையில் கபசுர குடிநீ்ர் போன்ற சித்த மருத்துவ  முறைகள் கொரோனா பெருந்தொற்றின் போது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தியது குறித்து எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்  ராணி, ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர்  ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். புகைப்பட கண்காட்சி அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சமூக நலன், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், சித்த மருத்துவ அமைப்பு, காசநோய் ஒழிப்பு, அஞ்சல்துறை ஆகியவற்றின் அரங்கங்கள் அமைக்கப்பட்டு கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வையும், உதவிகளையும் மேற்கொண்டனர். சர்வதேச சிறுதானிய ஆண்டுக் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இசை நாடகப் பிரிவின் கலைநிகழ்ச்சிகளும்  நடத்தப்பட்டன. இறுதியில் மத்திய மக்கள் தொடர்பக  தர்மபுரி அலுவலக களவிளம்பர உதவி அலுவலர்  தியாகராஜன் நன்றி கூறினார். தஞ்சாவூர் அலுவலக களவிளம்பர உதவி அலுவலர்  ரவீந்திரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *