மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் அகத்தர உறுதி மையம் இணைந்து மாணவர் மேம்பாட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், விவேகானந்த கல்லூரி அனைத்து மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தமிழ் துறை தலைவர் (பொறுப்பு) முனைவர் ராமர் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். செயலர் சுவாமி வேதானந்த குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம் , இப்படித்தான் வாழவேண்டும் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். நிறைவாக அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர்
முனைவர் சதீஷ்பாபு நன்றி உரை ஆற்றினார்.
இந்த நிகழ்வை, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.