சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அருகே உள்ள யானைமலை ஒத்தக்கடை சாலையில், திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.
மதுரை ஒத்தக்கடை சாலையில், மேலூர் சாலை, மாட்டுத்தாவணி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சாலைகளில், மாடுகள் மற்றும் கால்நடைகள் பல இடங்களில், சாலைகளின் நடுவில் செல்வதால், வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. சாலையில் நடந்தும், மற்றும் டூவீலர்களில் செல்லும் பொதுமக்களும் அச்சமடைந்து வருகிறார்கள். இது போல், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது,கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற கால்நடைகள் பறிமுதல் செய்து கோசாலைகளில் ஒப்படைக்க வேண்டும்,
என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மதுரை நகரில் அண்ணாநகர், மேலமடை, தாசில்தார் நகர், வண்டியூர், கோமதி புரம் , கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் கால்நடைகள் சுதந்திரமாக சுற்றி திரிவதால், சாலையில் செல்லும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்களாம்.
இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.