• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

வரும் 14ம் தேதி மாணவர்கள் சேர்க்கை பேரணி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Byகாயத்ரி

Jun 3, 2022

தமிழகத்தில் 10,11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, 10 மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியும், அடுத்த வாரத்தில் 11-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்க உள்ளது.

இந்நிலையில், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அத்துடன், பயிற்சிக்குப் பின்னர் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.மேலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். வரும் 14-ம் தேதி மாணவர்கள் சேர்க்கை பேரணியை ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.