

தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய ஒய் பிரிவு பாதுபாப்பை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு ஏழை, எளியோர் நடுத்தர மக்கள் நலசங்கம் சார்பில் விஜய் உருவ பானையை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பள்ளிகரணையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய ஒய் பிரிவு பாதுகாப்பை ரத்து செய்யக் கோரியும், தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் போலி சினிமா அரசியல் செய்து வரும் விஜயை கண்டித்தும் தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலசங்கம் சார்பில் அதன் தலைவர் லிங்கபெருமாள் தலைமையில் விஜயின் உருவ படம் ஒட்டப்பட்ட பானையை உடைத்து நூதன முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது விஜயை கண்டித்தும், விஜய்க்கு வழங்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பை ரத்து செய்யக் கோரியும், மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் 5 பானைகளில் விஜயின் உருவ படத்தை ஒட்டி அதனை சாலையில் போட்டு உடைத்து தங்களது கண்டனத்தை பதிவு செய்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

