மதுரையில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மதுரை கோட்ட செயலாளர் ரபிக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் கண்ணையாவை தேர்வு செய்தமைக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை கோட்ட செயலாளர் ரபீக், ‘ஒன்றிய அரசு ரயில்வே துறையை தனியாருக்கு மாற்றுவதை கை விடவில்லை என்றால் அதனை எதிர்த்து பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்; எனவும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.