2017ல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ரயில் மறியலில் ஈடுபட்டு கைதான 24 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை செல்லூர் ரயில் மேம்பாலத்தில் ரயிலை நிறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைசி நாளில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது; 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி நாகலட்சுமி உத்தரவிட்டார்.