

கடந்த 11 மாதங்களுக்கு முன்பாக கொரோனா இரண்டாவது அலையின்போது, மதுரையில் அட்சய பாத்திரம் டிரஸ்ட் என்ற அமைப்பு தொடங்கப் பெற்று ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கி வந்தது.

இத்திட்டம் தொடங்கப் பெற்று இன்றைக்கு 350 வது நாள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு மதுரையில் ரோட்டோரத்தில் வசிக்கும் வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனையில் தலை காயம் விபத்து பகுதியில் மொத்தம் 500 பேருக்கு இன்று மதிய உணவு வழங்கப்பட்டது.

மதுரை தெப்பக்குளம் அருகே உடலில் சாட்டை அடித்து பிழைப்பு நடத்தும் பிளாட்பாரத்தில் வசிக்கும் அந்த மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை சாஸ்தா அப்பளம் உரிமையாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். இந்நிகழ்வில் அவர்களுக்கு உணவினை வழங்கி மதுரை தெற்குத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் பங்கேற்று உணவினை வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.


