மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச பட்ச நிகழ்ச்சி ஆன கள்ளழகர் வைக ஆற்றில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை ஆரப்பாளையம் குரு தியேட்டர் மேற்கு கள்ளழகர் ஆட்டோ நிலையம் சங்கம் உறுப்பினரின் சார்பில்15 ஆண்டு அன்னதானம் 500க்கும் மேற்பட்டோர்க்கு சோலைராஜா தலைமையிலும் சங்கத் தலைவர் செந்தில், ரஜினிகாந்த், மாரி, சிவபாண்டி, தினேஷ், பழனி ஆகியோர் முன்னிலையில் சோலை இளவரசன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். கள்ளழகர் தரிசனம் செய்த பொதுமக்கள் பக்தர்கள் அறுசுவை உணவினை உண்டு மகிழ்ந்தனர். மேலும், இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.