• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வலிமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி -விஜயபாஸ்கர் பேட்டி

ByA.Tamilselvan

Jun 27, 2022

“வலிமை மிக்க ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதனையே அனைவரும் விரும்புகின்றனர்” என்று, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ் குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, “வலிமை மிக்க ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதனையே அனைவரும் விரும்புகின்றனர்.
புரட்சித்தலைவி அம்மா கூறியது போல, தன்னலம் கருதாது கட்சியின் நலனையும் கவனத்தில் கொண்டால், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.