• Mon. Apr 21st, 2025

மன அழுத்த விழிப்புணர்வு சிறப்பு வகுப்பு..,

ByKalamegam Viswanathan

Mar 29, 2025

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள மதுரை மேனேஜ்மென்ட் அசோசியன் சார்பாக உண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு நடைபெற்றது.

இதை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மன அழுத்தத்திலிருந்து மாணவர்கள் எவ்வாறு விடுபட வேண்டும் எனவும் மன அழுத்தம் ஏற்பட்டால் எப்படி எல்லாம் செயல்பட வேண்டும் நம் அதிலிருந்து எப்படி விடுபட வேண்டும் என பல்வேறு மன அழுத்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தினார். இதில் மதுரை மேனேஜ்மென்ட் அசோசியன் தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவிக்கையில் இது எங்களுக்கு மிகுந்த சிறப்பான வகுப்பாக இருந்தது எனவும் மன அழுத்தத்தில் இருந்து நாங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் எப்படி விடுபடுவது என உங்க பல்வேறு கேள்விகளுக்கு மிக சிறப்பான முறையில் காவல் ஆய்வாளர் தங்கமணி எங்களுக்கு வகுப்புகள் நடத்தினார் என தெரிவித்தனர் எங்களுக்கு ஒரு புதிய பாதை ஒன்று தென்பட்டது எனவும் தெரிவித்தனர்.