• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வலிமை! – ரசிகர்களின் ரியாக்ஷன்..!

நடிகர் அஜித்குமார் – ஹெச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. அஜித் ரசிகர்களின் 3 ஆண்டு காத்திருப்புக்கு பின் வெளியாகியிருக்கும் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் குவிந்திருந்தனர்

காலை 5 மணிக்கு படம் திரையிடப்பட்டதும், ரசிகர்கள், படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், படம் குறித்த ரியாக்ஷ்னை உடனுக்கு உடன் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அப்டேட் செய்து கொண்டே இருந்தனர். அவர்கள் கொண்டாடிய அளவுக்கு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை வலிமை பூர்த்தி செய்ததா? என்றால், இப்போது வெளியாகியிருக்கும் ரியாக்ஷன்களின்படி, பூர்த்தி செய்திருக்கிறது என்றே சொல்லலாம்.

படம் சூப்பராக வந்திருப்பதாகவும், ஆக்ஷன் காட்சிகளும், அஜித் பேசும் வசனங்களும் மாஸாக இருப்பதாக கூறியிருக்கும் ரசிகர்கள், முதல் பாதி மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். இரண்டாவது பாதியில் குறிப்பிட்ட சில இடங்களில் தொய்வு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். யுவனின் பிஜிஎம், காமெடி ஆகியவை பிளாட்டாக உள்ளது என கூறியுள்ளனர். கடந்த சில படங்களில் அஜித்துக்கு வலு சேர்த்த அளவுக்கு இந்தப் படத்தில் யுவனின் பிஜிஎம் இல்லை என ஒரு சிலர் கூறியிருந்தாலும், இன்னும் சிலர் தரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.