

சென்னை – கோலிவுட்டில் புது கதைகளுடன் களம் காணும் இயக்குனர் விக்னேஷ் சிவன். இறுதியாக சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி இருந்தார். தற்போது விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் காத்துவாக்குல 2 காதல் படத்தை இயக்குகிறார். இபடத்தில், டைட்டானிக் படக் காட்சி ஒன்றினை மறு உருவாக்கம் செய்த வீடியோ ஒன்று இணையத்தில், வைரலாகி வருகிறது!
காத்துவாக்குல 2 காதல் – நகைச்சுவை கலந்த ரொமான்டிக் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒரு முக்கோண காதல் கதையை நகைச்சுவையோடு அனைத்து வித ரசிகர்களையும் கவரும் படியான கதைக்களம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். காத்துவாக்குல 2 காதல் ஷூட்டிங் ஸ்பாட் நிகழ்வு அது.
ஒரு காட்சியின் மேக்கிங் வீடியோ, டைட்டானிக் படத்தில் டைட்டானிக் கப்பலின் ஒரு உச்சியில் ஜாக் மற்றும் ரோஸ் நின்றபடி கைகளை விரித்து நிற்கும் காட்சி. அந்த காட்சியை மறு உருவாக்கம் செய்ய விக்னேஷ் சிவன் கிரீன் மேட் உடன் தயாராக இருக்க விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்து அதற்கான ஒத்திகையில் ஈடுபடுகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!
