

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி பகுதியில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக காட்டுநாயக்கன் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது பிள்ளைகள் படிப்பிற்காகவும், அரசு சலுகைகளைப் பெறவும் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி, சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சிவகங்கை கோட்டாட்சியர்களிடம் மனு அளித்து வந்துள்ளனர். ஆனால் பல கோட்டாட்சியர்கள் மாறிய நிலையில், இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை.
எனவே காட்டு நாயக்கன் இன மக்கள் சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாம்புகளுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு கோட்டாட்சியர் முத்துக்களுவனை சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் முத்துக் கழுவன் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
