• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாநில அளவில் விளையாட்டு போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவிக்கு பாராட்டு

ByKalamegam Viswanathan

Feb 10, 2023

மதுரை மாநகராட்சி
தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில்
வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிக்கு, மேயர் இந்திராணி
பொன்வசந்த் ,பாராட்டு தெரிவித்தார்.
தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ,
தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.மாரிச்செல்விக்கு, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி எம்.மாரிச்செல்வி, தேசிய அளவில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்தியபிரதேசம் மாநிலம் போபால் நகரில் நடைபெற்ற 17 வது இளையோர் தேசிய தடகள போட்டியில்,தொடர் ஓட்டம் (200மீ) வெண்கலப் பதக்கமும், 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தி நகரில் நடைபெற்ற 37வது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன் போட்டியில்,தொடர் ஓட்டம் (400மீ) இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்தியபிரதேசம் மாநிலம் போபால் நகரில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு,
தொடர் ஓட்டம் (400மீ) போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
மேலும், மாநில அளவில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருவண்ணாமலை மாவட்டம், மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்திய மாநில குடியரசு தினவிழா தடகளப் போட்டி 19 வயது பிரிவில் (100மீ ,200மீ, 400மீ) ஆகிய தொடர் ஓட்டப் போட்டிகளில் தங்கப்பதக்கமும் மற்றும் குறுவட்டம் , வருவாய் மாவட்டம் மற்றும் மாநில அளவில் தனிநபர் சாம்பியன் பட்டமும் பெற்றுள்ளார்.
தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற அம்மாணவியை, மேயர், ஆணையாளர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.