• Wed. Apr 24th, 2024

அதானி குழுமம் பங்கு சந்தை மோசடி-பதிலளிக்க செபிக்கு நீதிமன்றம் உத்தரவு

Byதன பாலன்

Feb 11, 2023

அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை மோசடி தொடர்பாக, இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறைஆணை யம் (SEBI) பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பங்குச்சந்தை ஒழுங்கு முறை விதிமுறைகளை மாற்றுவது குறித்து நிபுணர் குழு அமைக்கவும் உச்ச நீதிமன்றம் யோசனை தெரி வித்துள்ளது. அதானி குழுமம், பங்குச் சந்தை வர்த்தகத்தில் சுமார் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்திருப்பதாக ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) நிறு வனம் கடந்த ஜனவரி 24 அன்று 106 பக்க அறிக்கை ஒன்றை வெளி யிட்டது. “கொரோனாவுக்கு பிந்தைய 2 ஆண்டுகளில் அதானி குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு 819 சதவிகிதம் அதிகரித்த நிலையில், இந்த வளர்ச்சி நேர்மையானது அல்ல; அதானி குழும நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்பை மோச டியாக உயர்த்திக் காட்டியுள்ளன. குடும்ப உறவினர்கள் மூலம் வெளி நாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பிலும், பண மோச டியிலும் ஈடுபட்டுள்ளன” என்று குற்றச் சாட்டுக்களை அடுக்கியிருந்தது. ‘ஹிண்டர்சன் ரிசர்ச்’ நிறு வனத்தின் இந்த ஆய்வறிக்கை பின்ன ணியில், அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு ரூ. 10 லட்சத்து 28 ஆயிரம் கோடி அளவிற்கு சரிந்தது. அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் மட்டும் சுமார் 4 லட்சத்து 92 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. உலகின் 3-ஆவது பணக் காரராக இருந்தவர், 17-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

ஆனால், இந்த இழப்பானது, அதானி குழுமத்திற்கு மட்டுமானதாக அல்லாமல், அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறு வனங்களையும் பாதித்துள்ளது. அதானி குழுமத்திற்கு பொதுத்துறை வங்கிகள் உட்பட பல்வேறு வங்கி கள் வழங்கியுள்ள ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கான கடன் என்னவாகும்? அது திரும்ப வருமா? பொது மக்களின் சேமிப்பு தப்புமா? என்ற கேள்விக்கணைகளை எழுப்பியது. இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் மனோஜ் திவாரி, எம்.எல். சர்மா ஆகியோர் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஹிண்டன் பர்க் அறிக்கை நாட்டிற்கு களங்கம் விளைவித்துள்ளதாகவும், முதலீட்டா ளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கை ஒரு சதித்திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எம்.எல். சர்மா ஆஜராகி, “குறுகிய காலத் திற்குள் அதானி குழும பங்குகள் 2 ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 600 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இப்படி யான வீழ்ச்சியை ‘செபி’ அமைப்பு தடுத்திருக்க வேண்டும். ஆனால் ‘செபி’ அமைப்பு அவ்வாறு தடை செய்யவில்லை. எனவே, இதில் உள்நோக்கம் உள்ளதாக தெரிகிறது” என்று குற்றம் சாட்டினார். அதற்கு ‘செபி’ அமைப்பு அதானி விவகாரத்தை மிக கவனமாக கண்காணித்து வருகிறது என்று ஒன்றிய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அப்போது, ‘செபி’ செயல்பாட்டில் எங்களுக்கு சந்தேகம் இல்லை என்று கூறிய நீதிபதிகள், தற்போது திடீ ரென பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து ள்ளதால் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை கருத்தில் கொண்டு, முதலீட்டா ளர்களைப் பாதுகாக்க ஒழுங்குமுறை ஆணையத்தின் நடைமுறைகளில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டுமா? என்பது குறித்து நிதி அமைச்சகத்தையும் ஆலோசித்து திங்கட்கிழமை பதில் அளிக்க வேண்டும் என ‘செபி’ அமைப்புக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும், “முதலீட்டாளர்களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். இப்படியான சூழல் மீண்டும் ஏற்படாத வகையில் முதலீட்டாளர்களின் நல னுக்காகவும், பங்குச் சந்தையின் நிலையான வளர்ச்சிக்காகவும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப் படுத்த வேண்டியது அவசியம்” என குறிப்பிட்ட தலைமை நீதிபதி அமர்வு, “பங்குச்சந்தை ஒழுங்குமுறைச் சட்ட விதிகளில் தேவையான மாற்றங் களைப் பரிந்துரைக்க நிபுணர் குழு அமைக்கலாம்” என்றும் யோசனை தெரிவித்து வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *