
திருப்பூரில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் உசிலம்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வரும் வியாஷ் ஆத்விக் (8) என்ற மாணவன் தேனி ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பாக பங்கேற்று முதல் இடம் பிடித்து தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவனை தேனி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியின் பயிற்சியாளர் ஆனந்தபாபு பாராட்டு தெரிவித்தார்.
