• Tue. Apr 22nd, 2025

அங்கன்வாடி பணியாளர்கள் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

ByP.Thangapandi

Feb 5, 2024

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இடைக்கால பட்ஜெட்-யை அறிவித்தார்.,

இந்த பட்ஜெட்டில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்காக ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் ஒதுக்கீடு செய்யும் தொகையை விட சுமார் 300 கோடிக்கும் மேல் குறைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.,

குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கான நிதியை குறைத்து நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு சிஐடியூ தொழிற்சங்க மாநில செயலாளர் தெய்வராஜ் தலைமையில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய அரசின் பட்ஜெட்-க்கு எதிராகவும் கண்டன கோசங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.