

குமரி நண்பர்கள் விளையாட்டு குழு அமைப்பின் சார்பில், குழுவின் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அஞ்சுகிராமத்தில் மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
கபடி போட்டியில் பங்கேற்ற இரண்டு குழுவின் கேப்டன் மற்றும் விளையாட்டு வீரர்களை சிறப்பு விருந்தினர் கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும், தலைவருமான பி.டி.செல்வகுமார் விளையாட்டு வீரர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். தொடர்த்து, விளையாட்டு வீரர்களை வாழ்த்திய பி.டி. செல்வகுமார், வெற்றி பெறும் அணி எது வென்றாலும் அவர்களுக்கு வாழ்த்துகளை முன்னதாகவே தெரிவித்துக்கொள்கிறேன். கபடி விளையாட்டு தமிழர்களின் அடையாள விளையாட்டு. இந்த கபடி விளையாட்டை அய்யா சி.பா.ஆதித்தனார் அவரது வாழ் நாள் முழுவதும் ஆதரித்தார். கபடி விளையாட்டு நடைபெறும் திடல்கள் எங்கும் அய்யா சில.பா.ஆதித்தனார் நினைவு போற்றப்படுகிறது என தெரிவித்தார் பி.டி.செல்வகுமார்.
