

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான விண்டோஸ் கூடைப்பந்து போட்டியில் சிவகாசி அணி முதல் பரிசு பெற்றது. வெற்றிபெற்ற சிவகாசி அணிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாழ்த்து தெரிவித்தார். விருதுநகரில் மாநில அளவிலான விண்டோஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் கருணாகரன் நினைவு கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதி போட்டியில் சிவகாசி வாரியார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், கோவை ராஜலட்சுமி அணியும் மோதியது. இதில் சிவகாசி அணி 74 புள்ளிகளும், கோவை அணி 64 புள்ளிகளும் பெற்றது. முதல் பரிசு ரூ.9 ஆயிரம் மற்றும் கோப்பை சிவகாசி அணிக்கு வழங்கப்பட்டது. 2-வது பரிசு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பை கோவை அணிக்கு வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற சிவகாசி அணியை கூடைப்பந்து அணியை விளையாட்டு ஆர்வலர்கள், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பாராட்டினர். வெற்றி பெற்ற சிவகாசி வாரியார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சிவகாசி கிழக்கு பகுதி அம்மா பேரவை நிர்வாகி அருண்குமார், சிவகாசி மாநகரம் திருத்தங்கல் மேற்கு பகுதி கழக செயலாளர் சரவணக்குமார், சிவகாசி கிழக்கு பகுதி கழக செயலாளர் சாம் (எ) ராஜா அபினேஷ்வரன், சிவகாசி மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாயாண்டி உடனிருந்தனர்.
