

தமிழ் நாடு கிராமிய கலைஞர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசின் அனைத்து சுகாதார நல திட்டங்களை துண்டு பிரசூரங்கங்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். குமரி_சென்னை இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட. தமிழ் நாடு கிராமிய கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் பழனியாபிள்ளை மற்றும் பாடகர் ராஜேந்திரன் மேற்கொண்ட இரு சக்கர வாகனம் பயணத்தை, கன்னியாகுமரி அண்ணல் தேசப்பிதா காந்தி நினைவு மண்டபம் முன்பிருந்து, கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இரு சக்கர வாகன பயண குழுவினர் இருவரை, நாகர்கோவிலில் மேயர் மகேஷ் வரவேற்று விழிப்புணர்வு பயணம் வெற்றி பெற வாழ்த்தி, இருவருக்கும் சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தார்.
