
சோழவந்தானில் மின்னொளி மைதானத்தில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அரசு பள்ளி மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி மாலை மின்னொளியில் மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. சோழவந்தான் கூடை பந்தாட்ட கழக சேர்மன் தொழிலதிபர் டாக்டர் எம். மருதுபாண்டியன் போட்டியினை துவக்கி வைத்தார். இதில் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றனர். மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில் சென்னை வி.கே.எம் ஜெயராமன் அணி முதல் பரிசு ரூ-21,000 மற்றும் கோப்பையிணைபெற்றது. இரண்டாம் பரிசினை சென்னை எஸ். பி. ஓ ஏ அணியும், மூன்றாம் பரிசினை வத்தலக்குண்டு அணியும், நான்காம் பரிசினை வடமதுரை அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.எஸ்.கே.ஜெயராமன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கொரியர் கணேசன், திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ், திமுக நிர்வாகி ஜீவபாரதி, பேட்டை ராஜேஷ், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட நன்கொடையாளர்கள் கூடை பந்தாட்ட வீரர்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சோழவந்தான் கூடை பந்தாட்ட கழக செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

