
நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில், போலீஸ்காரர் கணபதி உயிரிழந்தார்.
மதுரை, போலீஸ் குடியிருப்பு-ஐ சேர்ந்த கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி(40) மற்றும் அவரது மனைவி சங்கீதா(40) இருவரும் இரு சக்கர வாகனத்தில், திண்டுக்கல் நிலக்கோட்டையை அடுத்த குளத்துப்பட்டி தியாகராஜா மில் அருகே வந்து கொண்டிருந்த போது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் மதுரை சேர்ந்த காவலர் கணபதி உயிரிழந்தார். இவரது மனைவி சங்கீதா காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்த வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

