மாநில அளவில் 93 வது சீனியர் தடகள போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில் குமரியை சேர்ந்த திருமதி M. S. கிருஷ்ண ரேகா அவர்கள் முதலிடம் பெற்றார்.
பரிசு பெற்ற பெண் காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ.பத்ரிநாராயணன் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார். இவர்களுடன் உயரம் தாண்டுதலில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்றவரும், பயிற்ச்சியாளருமான ஆறுமுகம்பிள்ளை மற்றும் குமரி மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சாந்தகுமாரியும் உள்ளார்.
மேலும் தடகள வீராங்கணை கிருஷ்ணரேகா 2019 ல் சீனாவில் நடைபெற்ற உள்ள காவல்துறைக்கான விளையாட்டு போட்டியில் தங்கபதக்கம் பெற்றது குறிப்பிடதக்கது.