• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம்..,

ByK Kaliraj

Feb 26, 2026

விருதுநகர் ஜெய் ஹோட்டல் மற்றும் ரெசிடன்சி கூட்டரங்கத்தில் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, சேலம் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் மற்றும் விருதுநகர் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) இணைந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர், சுகபுத்ரா, தலைமையில், மதுரை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மண்டல பயிற்சி மையத்தின் துணை ஆட்சியர் / இளநிலை நிர்வாக அலுவலர், திரு. எம். ரங்கசாமி அவர்கள், விருதுநகர் வேளாண்மை இணை இயக்குநர், திரு. பா. மோகன்தாஸ் சௌமியன் அவர்கள், விருதுநகர் வேளாண்மை துணை இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், திருமதி. அம்சவேணி அவர்கள், விருதுநகர் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), திருமதி. எம். செல்வி அவர்கள் மற்றும் சேலம் வேளாண்மை உதவி இயக்குநர் (பயிற்சி), திரு. வ. ஜெயக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், “ சிறுதானிய இயக்கம் – விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுததுதல் குறித்த பணிமனை ” நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.

மேற்படி சிறுதானியம் இயக்கம் சார்ந்த பணிமனை நிகழ்வில், கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையம், முனைவர், திருமதி. ஷிபா அவர்கள், பண்ணை மேலாளர், திரு. ஜீவா அவர்கள், விருதுநகர் மாவட்ட தொழில் மையம், திரு. பிலிப் மில்டன் அவர்கள் மற்றும் மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி, உணவு அறிவியல் துறை, டாக்டர். கலைச்செல்வன் அவர்கள் ஆகியோர் முறையே “ காலநிலை மாற்றங்களுக்கேற்ப சிறுதானியங்கள் இரகங்கள் தேர்வு, உற்பத்தி தொழில் நுட்பங்கள், பயிர் மேலாண்மை, அறுவடை மற்றும் அறுவடை பிந்தைய தொழில் நுட்பங்கள் குறித்தும் ”, “ சிறுதானியங்களுக்கான வணிகம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் – பேக்கிங், லேபிலிங் நுட்பங்கள், FSSAI உரிமம் பெறுதல் மற்றும் ஆன்லைன் யுக்திகள் குறித்தும் ” மற்றும் “ சிறுதானியங்களுக்கான பதப்படுத்துதல் தொழி்ல்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்தும் ” சிறப்பாக பயிற்சி அளித்தனர். மேற்படி பயிற்சி வகுப்புகளில், சுமார் 100 சிறுதானிய விவசாயிகள் மற்றும் சிறுதானிய தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றனர்.