தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட சுகாதார அலுவலர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் நிகிதா தேவி, சுகாதார ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 17 வகையான மருத்துவ பிரிவுகளைக் கொண்டு மருத்துவ பயனாளிகளுக்கு மருத்துவ சோதனை முதல் மருத்துவ சிகிச்சைவரை செய்தனர்.

நிகழ்வில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் மருத்துவ சாதனைகள் மருத்துவச் சேவைகள் குறித்து விளக்கிப் பேசினார். மேலும் கர்ப்பிணித் தாய்மார்கள் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் மருத்துவப் பெட்டகங்களை வழங்கினார். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வள்ளியம்மை தங்கமணி, திமுக ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இம்மு முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு அமைச்சர் கையாலேயே வழங்கப்பட்டது.
இம்முகாமில் 1400 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் பயன்பெற்றனர்.










