• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்..,

ByM.S.karthik

Sep 20, 2025

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் வட்டாரம் சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள பள்ளியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் சத்திரபட்டி வட்டார மருத்துவ அலுவலர் Dr.பத்மாவதி அரசு இராஜாஜி மருத்துவமனை டீன் அருள்சுந்தரேஸ், நுரையீரல் துறை (TB) துணை இயக்குநர் ராஜசேகரன் குடும்ப நலன் துணை இயக்குநர் நடராஜன் காஞ்சரம்பேட்டை கோவில் பாப்பாக்குடி குலமங்கலம் துணை சுகாதார நிலைய தலைமை மருத்துவர்கள் வசுமதி இந்துமதி ராஜ்கபூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொண்ணுபாக்கியம் சுகாதார ஆய்வாளர்கள் அண்ணாதுரை நாகேந்திரன், சத்தியமூர்த்தி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வராஜ், அலுவலர்கள் சிவசந்திரன் சரவணன் ஜெயக்குமார்,மேற்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டாட்சியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள்மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன்,வீரராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் கண் இதயம் பொது மருத்துவம் குழந்தை வளர்ச்சி மகப்பேறு உட்பட அனைத்து விதமான மருத்துவம் சம்பந்தமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் சத்திரபட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.