விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக ஐந்து இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று இன்று ஆறாவது இடமாக மாத்தூரில் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் நடைபெற்ற முகாமில் 680 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடி தீர்வாக 72 நாபர்களுக்கு தீர்வு காணப்பட்டு நகல் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பு கண்காணிப்பாளர் V. தெய்வநாயகி குளத்தூர் வட்டாட்சியர் சோனை கருப்பையா துணை வட்டாட்சியர் முத்துக்காளை விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் RR.ரவிசந்திரன் வள்ளியம்மை ஆகியோர் தீவிர கண்காணிப்பில் இந்த முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மனு வழங்க வந்த பொதுமக்களை வரவேற்ற விராலிமலை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முபிம.சத்தியசீலன் முன்னாள் சேர்மன் முபி.மணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவா மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்து மனு வழங்க வருகை தந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.