தன் உழைப்பால் மக்களுக்கு உழைக்கும் எடப்பாடியாருக்கு விளம்பர வெளிச்சம் என்றாலே தெரியாது. விளம்பர வெளிச்சத்தால் மட்டும் ஆட்சியை நடத்திக் கொண்டு, சர்க்கஸ் கூடாரம் போல ஆட்டம் நாடும் அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனநாயகத்தின் அடித்தளம் சமதர்மமாகும், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற கொள்கை, கோட்பாடு என்பது இன்றைக்கு எங்கே போனது என்ற கேள்விக்குறி தான் எழந்துள்ளது? பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள் இனி அரசியல் அதிகாரத்தில் ஈடுபட முடியாது என்பது தான் இன்றைக்கு முத்துவேல் ஸ்டாலின் குடும்பம் சொல்கிறது.
ஸ்டாலின் குடும்பம் தமிழக மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவென்றால்? தேர்தல் என்றாலும் சரி ,சேவை என்றாலும் சரி, இதற்கான அதிகாரம் எல்லாம் ஒரு குடும்பத்துக்கு சொந்தம். யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலையை உருவாக்கி வருகிறார்கள்.
இன்றைக்கு போதை பொருள் நடமாட்டம் சந்து சிரிக்கிறது, சட்ட ஒழுங்கு சந்து சிரிக்கிறது, விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது, மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது, பாலியல் தொல்லை, கொலைகள் தினந்தோறும் நடைபெறுகிறது. ஆனால் மக்கள் கேள்விக்கு வைக்க கூடாது என்ற நிலை உள்ளது. இன்றைக்கு வெளிநாட்டு அந்நிய முதலீடுகளில் தமிழகம் பின்தங்கி செல்கிறது. நாட்டின் நடக்கும் அவலங்களை குறித்து, நாள்தோறும் எடப்பாடியார் அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறார். ஆனால் ஸ்டாலின் எதுவும் நடைபெறாது போல, இந்தியாவிலேயே தமிழகம் முழுமையாக உள்ளது என்று கூறிக்கொண்டு. உண்மை நிலை என்று தெரியாமல் உள்ளார்? இன்றைக்கு உண்மை நிலை கடன் வாங்கும் மாநிலத்தில் தமிழகத்தை முதன்மையாக்கியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் இதற்கெல்லாம் தகுந்த பாடங்களை மக்கள் புகட்ட வேண்டும், மக்கள் வருகின்ற தேர்தல் காலங்களில் எச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டும், ஏனென்றால் இன்றைக்கு அரசியல் விழிப்புணர்வு கேள்விக்குறியாக எழுந்துள்ளது?
தமிழக மக்கள் இனி விழிப்பாக இருக்க வேண்டும். இன்றைக்கு தமிழகத்தில் மக்களின் முதல்வராக இருக்கும் எடப்பாடியார் உழைப்பால் உயர்ந்து வருகிறார். இவருக்கு விளம்பரம் வெளிச்சம் என்ன என்றால் தெரியாது?
ஆனால் ஸ்டாலின் விளம்பர வெளிச்சத்தால் மட்டும் ஆட்சி நடத்திக் கொண்டு, சர்க்கஸ் கூடாரம் போல ஆடும் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் தான் 2026 ஆகும்.

ஆகவே சர்க்கஸ் கலைகளை ஸ்டாலின் கற்றது திறமைக்காகவா? அல்லது தங்களின் வாழ்வாதாரத்திற்கவா? இன்றைக்கு ஜிமிக்கி ஜிக்கா போல ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலின் ஆட்சிக்கு மாற்றத்தை கொண்டு வந்ததால் உண்மை நிலை தெரியும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற சமதர்மத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைந்ததால் உருவாகும்.
இன்றைக்கு வரலாற்று வளர்ச்சி இருக்கிறது என்று குழி தோண்டி புதைக்கின்ற பொய்யர்கள் ஆட்சி இனி தமிழகத்தில் இருக்காது. மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் ஜனநாயக ஆட்சி மலரும் என கூறினார்.
