• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மக்களின் நம்பிக்கை இழந்த ஸ்டாலின் திமுக அரசு..,

ByKalamegam Viswanathan

Jul 15, 2025

ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதில் ஒரு கின்னஸ் சாதனை படைத்து வருவதை நாம் நன்றாக அறிவோம் இன்றைக்கு அதனுடைய தொடர்ச்சியாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்றைய துவங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அவர்கள் அப்படியானால் மக்களுடன் முதல்வர் என்று ஏற்கனவே தொடங்கிய அந்த திட்டம் காலவதி ஆகிவிட்டதா? அல்லது மக்களுடைய கவனத்தை பெறவில்லையா? அல்லது மனுஷனுக்கு தீர்வு காணவில்லையா?

ஏற்கனவே பேரறிஞர் பிறந்த அண்ணா காலத்தில் இருந்து மக்கள் தொடர்பு முகாம் என்கிற மக்கள் குறைந்திருக்கிற முகாம், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் முகாம்,திங்கள் கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம், அம்மா காலத்தில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழம தோறும் அம்மா சிறப்பு திட்ட முகாம், எடப்பாடியார் காலத்தில் உருவாக்கப்பட்ட முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம், இந்த முகாமுடைய திட்டங்கள் எல்லாம் என்ன ஆயிற்று? அல்லது நான்கு வருடங்களில் மக்களுக்கு இந்த முகாம்களில் எதுவுமே செய்யவில்லை என்கிற ஒப்புதல் வாக்குமூலமா?

நீங்கள் மக்களின் தேடி அரசு என்று சொல்லுகிறீர்கள் இந்த நான்காண்டுகளில் நீங்கள்
என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என் மக்கள் இன்றைக்கு கேள்வியாக கேட்கிறார்கள்?

உங்களுடைய விளம்பர மாடல் அரசு என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலமாக
நேற்றைய தினம் நீங்கள் (ஸ்டாலின்) ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறீர்கள் அதற்கு பல்வேறு கேள்விகளை எடப்பாடியார் கேட்டு உள்ளார்

அரசு தகவல்களை ஊடகங்களுக்கு பரிமாற நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள், திட்டங்கள் குறித்து செய்தி ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பார்கள் என அறிக்கப்பட்டுள்ளது இதில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங்பேடி, தீரஜ் குமார், அமுதா இவர்களெல்லாம் மக்கள் நன்மதிப்பைப் பெற்ற அதிகாரிகள்

இன்றைக்கு தங்கள் ஆட்சியில் நன்மதிப்பை இழந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், நம்பிக்கை இழந்த இந்த அரசுக்கு மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிற அதிகாரிகளை முன்னிறுத்தி அவர்களுடைய முகமூடியை பயன்படுத்தி இந்த தகவல்களை எல்லாம் வெளியே சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார், அப்போதும் மக்கள் நம்பிக்கை பெற முடியாது, இவர்கள் என்ன சொன்னாலும் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை ஏனென்றால் இந்த அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் .

ஆகவே ஏற்கனவே துவங்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் இன்றைக்கு தள்ளி வைத்துவிட்டு, ஒத்திவைத்துவிட்டு இப்போது பக்கம்,பக்கமாக விளம்பர உச்சத்தின் நடைமுறையில் மிச்சம் எதுவுமில்லை என்பதுதான் இந்த அரசினுடைய நிலையாக இருக்கிறது

பொதுவாக செய்தி துறை வாயிலாகவே அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன இதற்கு இரண்டு ஐஎஸ் அதிகாரிகள் இருக்கிறார் .

இப்போது மக்கள் நன்மதிப்பை பெற்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகளின் முகமூடியை வைத்து செய்திகளை மக்களிடத்திலே கொண்டு போய் சேர்த்தால் ஒருவேளை மக்கள்
வரவேற்பு ஏற்படும் என்று நினைத்தால் அது எடுபடாது

இந்த புதிய அறிவிப்பு உங்கள் அரசினுடைய பெயிலியர் என்பதை காட்டுகிறது? இதெல்லாம் நீங்கள் ஒப்புதல் வாக்குமூலம் வாயிலாக கொடுக்கப்பட்டிருக்கிறது?

வெள்ள காலங்கள், சுனாமி காலங்களில் எல்லாம் அம்மா ஆட்சியில் சிறப்பாக பணியாற்றி நல்ல பெயரை பெற்ற இந்த அதிகாரிகளின்
நன்மதிப்பை பயன்படுத்தி அரசு முயற்சிப்பதாகத்தான் இந்த அறிவிப்பு தெரிகிறது?

ஒவ்வொரு துறைக்கும் அதிகாரிகள் இருக்கிறார்கள் துறையினுடைய செயலாளர்களே வெளியிடலாமே? எதற்கு இந்த நான்கு பேர்களை நீங்கள் தேர்வு செய்திருக்கிறீர்கள்?
நீங்கள் எதை சொன்னாலும் இனிமேல் இந்த மக்கள் நம்ப தயாராக இல்லை?

இந்த பத்தாயிரம் முகாமில் என்ன தீர்வு காண்பீர்கள் மின்சார கட்டணத்தை குறைக்க சொன்னா குறைப்பீர்களா? ஏற்கனவே அம்மா ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம்,மடிக்கணினி திட்டம், கண்மாய் தூர்வார் திட்டம் ஆகியவற்றை மனு கொடுத்தால் செய்வீர்களா?

திடீர் என்ன அவசரம் ஏற்கனவே உள்ள மக்களின் குறைதீர்க்கும் பல்வேறு கட்டமைப்புகள் என்ன ஆனது? இதே அம்மா ஆட்சியில் அம்மா திட்ட மூலம் 68 லட்சம் மனுகளுக்கு தீர்வு கண்டோம்,

இன்றைக்கு மக்களின் நம்பிக்கையில் தோல்வி அடைந்த இந்த அரசு ,அந்த தோல்வியிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக மக்களின் நம்பிக்கை பெற்ற அரசு அதிகாரிகள் முகவரியை பயன்படுத்தி உண்மைக்கு மாறாக பொய்யான செய்திகளைபரப்பி, அரசுக்கு முட்டுக் கொடுக்க நினைக்கிறது இது குறித்து
எடப்பாடியார் கேட்ட கேள்விக்கு இதுவரை ஸ்டாலின் மௌனம் காத்து வருகிறார்.

கடலூரில் மாவட்டத்தில் திட்டத்தை துவக்கி வைக்கிற முதலமைச்சர் ஸ்டாலின் எடப்பாடியாரின் கேள்விக்கும்,மக்கள் மத்தியிலே எழுந்திருக்கிற இந்த ஐயப்பாட்டுக்கும் பதில் அளிக்க முன்வருவாரா?

இன்றைக்கு பெயிலியர் மாடல் தோல்வியடைந்த மாடல் அரசாங்க உள்ள இந்த அரசின் குறைகளை மறைக்க இரும்பு போர்வையால்
நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் தான் முடியும்.

உங்கள் முயற்சி தோல்வியடையும் அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கின்ற திட்டங்கள் அறிவிப்பு மக்களுக்கு எந்த பயனும் தராது எனக் கூறினார்.