• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ByS. SRIDHAR

Sep 10, 2025

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நாகமலை புதுக்கோட்டை ஊராட்சிக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் நாகமலை புதுக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கலைஞர் உரிமைத்தொகை பட்டா மாறுதல் உள்ளிட்டா பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதில் மதுரை மேற்கு வட்டாட்சியர் செந்தாமரை வள்ளி மண்டல வட்டாட்சியர் சரவணகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் மணி அழகு பாண்டி மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன் கிராம நிர்வாக அலுவலர் காமேஸ்வரன் வருவாய் ஆய்வாளர் ஆனந்த் ஊராட்சி செயலாளர்கள் கண்ணன் விஜயபாஸ்கர் ஜெகதீசன் வடிவேலு ரவி கிருஷ்ணன் ராஜா முத்துப்பாண்டி கார்த்திக் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் திடியன் ஊராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கப்பாண்டி சதீஷ்குமார் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் செண்பகம்வட்டாட்சிய பாலகிருஷ்ணன் செல்லம்பட்டி மருத்துவர் ரமேஷ் ஊராட்சி செயலாளர்கள் பாண்டி தங்கமலை உட்பட கலந்து கொண்டனர்.