

ஸ்டாலின் ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் தெரியவில்லை. அவர்கள் வாங்கிய கடன் தான் கண்ணுக்குத் தெரிகிறது. காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இவ்வாறு கூறினார். மேலும், நீட் தேர்வு ரத்து ரகசியம் “என் பாக்கெட்டில் உள்ளது” என்று முதல்வர் கூறினார். ஆனால் அவர் பாக்கெட்டில் வெறும் காலி பெருங்காய டப்பா மட்டுமே உள்ளது என்ற ஆர் பி உதயகுமார்,
கல்விக் கடன் ரத்து என்பது போன்ற தேர்தல் வாக்குறுதி 525 ல் 90% நிறைவேற்றப்பட்டதாக அண்டப்புழுகு, ஆகாசபுழுகை ஸ்டாலின் கூறி வருகிறார். மக்களின் குறைகளை சட்டசபையில் எடுத்துக் கூற முதல்வரும், சபாநாயகரும் அனுமதி மறுக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

