• Sun. Apr 28th, 2024

கர்நாடகாவில் மேகதாது அணைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ராம சீனிவாசன் பேட்டி..,

Byகுமார்

Jul 18, 2023

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று மாநில பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்தார். மதுரையில் இது குறித்து மாநில பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் அளித்த பேட்டி,

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருகின்ற போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனை ஏற்படுகிறது. தமிழகத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் கபினி உள்பட நான்கு இடங்களில் கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு சம்மதம் தெரிவித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சினை தலைதூக்க தொடங்கியது. இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தீர்வு காணப்பட்டது . இதை தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் தீர்வு ஏற்படுவதற்கு மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துள்ளது. .தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் வேண்டுமென்றே திமுக வழக்கு தொடுக்கவில்லை. ஆனால் ரங்கநாதன் என்பவர் பொது வழக்கு தொடர்ந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடகா கூறிய போது அப்போதைய அதிமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது ஜெயலலிதா மீதுள்ள காழ்ப் புணர்ச்சியால் தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்து பிரச்சினை ஏற்படுத்தியது. கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில மேகதாது அணை கட்டுவோம் என்று கூறியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்றைக்கு எதிர்க்கட்சி கூட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் மேகதாது அணை கட்டுவது தவறு என்று கூறவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 66 மாவட்டங்களில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம் .திமுக அமைச்சர் துரைமுருகன் கூட மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை குறித்து மௌனம் சாதிப்பதின் மர்மம் புரியவில்லை. எனவே மேகதாது அணை கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பார்வையாளர் கார்த்திக் பிரபு, பொதுச் செயலாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன் குமார்,செயலாளர்கள் சுபா நாகுலூ, பொருளாளர் நவீன அரசு ,ஊடகப் பிரி தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *