
திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார் மண்டலம் ஐந்தின் உதவி ஆணையர் சுரேஷ் மண்டல தலைவர் ஸ்வீதா விமல் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 68 மனுக்கள் பெறப்பட்டு அவர்களுக்கான குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரருடன் கலந்து பேசி சீரமைக்க மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டனர். வழக்கமாக இருப்பதை விட மண்டலம் 5ல் இன்று திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் குருசாமி தலைமையில் ஆய்வாளர் லிங்கபாண்டியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மற்றும் உரை தீர்ப்பு முகாமில் கலந்து கொள்ள வந்த பொது மக்களிடம் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

