

கற்பனையாக நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் எப்படி கலந்து கொள்ள முடியும்.தேர்தல் நேரத்தில் தேசிய ஜன நாயக கூட்டணியில் கட்சிகள் குறித்து தெரியும்.2026ம் ஆண்டு திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே நோக்கம்.
அண்ணாமலை பேட்டி,
சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கனிமொழி சமூக வலைதளத்தில் கல்விக்கு பணம் தர மறுப்பதாக கூறுவது தவறானது. மத்திய அரசு கல்விக்கு நிதி உதவி வழங்கி உள்ளது. கடந்த ஆண்டு பி எம் ஸ்ரீ கல்வி திட்டத்தை ஏற்று கொள்வதாக ஏன் சொன்னதை கனிமொழி பதில் சொல்லாதது ஏன். எங்கையும் கல்வி பணம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. சமகிக்ஷா பணம் எதற்கு பயன்படுத்த முடியுமோ அதற்கு பயன்படுத்த முடியும். பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தை புதிய கல்வி கொள்கையில் புதிய விசயங்களுக்காக பயன்படுத்தலாம் என்று மத்திய மந்திரி கூறி உள்ளார். இதை திரித்து மாற்றி பணம் தர மறுப்பதாக கூறுவது தவறானது.

மத்திய அரசு மேற்பார்வையில் நடந்தாலும் அந்தந்த மாநில அரசுகளின் என்.ஜி.ஒ.க்கள் தரவுகளை நடத்துகிறது. எனக்கு வரக்கூடிய டெட்டாவை மாற்ற கூடிய வகையில் கனிமொழி பேச்சு உள்ளது. இந்தியா முழுவதும் ஏசர் அமைப்பு நடத்தியது. பள்ளி கூடங்களில் தரவுகளை எடுக்கப்பட்டு உள்ளதை கனிமொழி குற்றம் சொல்வது சரியல்ல.
எல்லாருடைய நோக்கமும் 2026ம் ஆண்டு திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது தான். காலம், சூழல் இன்னும் 8 மாதம் இருக்கிறது. திமுக மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி விட்டது. பா.ஜ.க. கட்சியை வளர்க்கும் பணியில் உள்ளது. தேர்தலுக்கான காலம் வரும் போது என்.டி.ஏ. கூட்டணி இருக்கும். அமமுக கூட்டணியில் தான் இருக்கும். தமிழ் நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி வலிமை அடைந்து வருகிறது என்பதில் மாற்றமில்லை. தேர்தல் நேரத்தில் யார் இருப்பார்கள் என்பது தெரியவரும்.
சில நேரங்களில் முதலமைச்சர் கண்ணாடியை பார்த்து கொண்டு அவரே பேசி கொள்கிறாரோ என சந்தேகம் வருகிறது. தனியார், சிபி எஸ் சி பள்ளிகளில்.தமிழ் கட்டாயம் இல்லை. அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகமாக உள்ளனர். அரசு பள்ளியில் மட்டும் மொழி கொள்கையை திணிக்காதீர்கள்.
கேந்திரா வித்தியாலயாவில் தமிழ் படிக்க வேண்டும் என்று மானவர்கள் விரும்பினால் ஆசிரியர் தேர்வு செய்கின்றனர். தமிழ் ஆசிரியர்களை அரசே அனுப்பலாமே. முதலமைச்சர் பொய்யான வார்த்தைகளை சொல்லலாம்.
திருமணத்திற்கு செல்லும் போது மணமக்கள் யார் என்று தெரியும் என்பதால் செல்கிறோம். அனைத்து கட்சி எதுக்கு என்று தெரியாது. தொகுதி மறுவரையறை குறித்து யார் சொன்னார்கள். மக்கள் தொகை அடிப்படையில் நடக்கும் என்று சொல்லவில்லை. மறுவரையறைக்கு கமிஷன் எதுவும் போடப்படவில்லை. எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அனைத்து கட்சி கூட்டம் பெண்கள் பாதுகாப்பு குறித்து நடந்தால் பா.ஜ.க. பங்கேற்கும். கற்பனையாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு எப்படி செல்ல முடியும்.
மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக சொல்லாத வகையில் எதுவும் சொல்லவில்லை. எந்த அடிப்படையில் தகவல் வந்து என்பதை முதலமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை குறித்து எதுவும் அறிவிக்காமல் தொடர்ந்து முதலமைச்சர் பேசினால் திசை திருப்புகிறார் என்று அர்த்தம்.
திமுக வீட்டிற்கு போக வேண்டும். பா.ஜ.க
வளர்ந்து வருகிறது. நாங்கள் எல்லாரிடமும் அன்பாக தான் பழகிறோம். எங்களுக்கு எதிரி யாரும் கிடையாது. கட்சி தமிழகத்தில் வளர்ந்து வர வேண்டும் என்பது தான் நோக்கம். தேசிய ஜன நாயக கூட்டணியில் யார் இருப்பார்கள் என்பதை நேரம் வரும் போது தெரியும்.
அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையை காட்டுகிறது. மீனவர்கள் பெயரில் திமுகவினர் கடத்தல் செய்கின்றனர். இதனால் அப்பாவி மீனவர்கள் சிக்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

