

தமிழகத்தில் மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டியளித்துள்ளார்.
மாநில அரசு மத்திய அரசிடம் ஈகோ பார்க்கிறது. தன் வீட்டு குழந்தைகளை ஹிந்தி படிக்க வைத்து விட்டு, 1960 இல் நடந்தது போல் ஹிந்தி எதிர்ப்பை கொண்டு வருகிறார்கள்.
வெளிமாநிலத்தவர் இங்கு வந்தால் எப்படி ஊர் பெயர்களை புரிந்து கொள்வார்கள் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர்.
செல்வப் பெருந்தகை ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்டட்டும்.
கோயம்புத்தூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன்..,
கோயம்புத்தூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட கட்டிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷவால் திறக்கப்படுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக செல்கிறோம். பாரதிய ஜனதாவை பொருத்தவரையில் தமிழகத்தில் பலத்தை அதிகரித்து வருகிறோம் உட் கட்சி தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தில் இரு மொழி கொள்கை மும்மொழி கொள்கையை வைத்துக்கொண்டு திராவிட கட்சிகளும், மேலும் பல கட்சிகளும் 1960 இல் நடந்த இந்தி எதிர்ப்பு பிரச்சாரங்களை கொண்டு செல்கிறார்கள். ஆனால் தன் வீட்டில் உள்ள குழந்தைகளை ஹிந்தி படிக்க வைத்து விட்டு, பொது இடங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கிறார்கள். பொது மக்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதற்கு இவர்களுக்கு உரிமை இல்லை. வெளியூரிலிருந்து வந்து இங்கு இறங்குபவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் குறுகிய மனப்பான்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவிற்கு தமிழ் மீது அக்கறை இல்லை என்பது போல் எடுத்துச் செல்கிறார்கள். பாரதிய தேசம் முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழை கொண்டு செல்ல வேண்டும்.
உலகத்தில் உள்ள தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்றாலும் அவர்களின் வீட்டில் தமிழில் தான் பேசுகிறார்கள்.
முதல்வர் இரு மொழி கொள்கையில் ஆங்கிலத்தை வளர்த்துள்ளோம். அதனால் தான் உலக அளவில் பிரபலமாக இருக்கிறோம் எனக் கூறுகிறார். இவர் கூறுவது ஆங்கிலத்தை வளர்த்துள்ளோம், தமிழை வளர்க்கவில்லை. அப்பொழுது ஆங்கிலத்தை வளர்த்தாலும் வளர்ப்பார்களே தவிர இன்னொரு இந்திய மொழியை வளர்க்க மாட்டார்கள் என்பதை தெளிவாக தெரிகிறது. இதை மக்கள் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் மூன்று மொழிகளை படிக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளும் மூன்று மொழிகளை படிக்கிறது. ஆனால் மக்கள் மட்டும் தான் இரண்டு மொழிகள் படிக்க வேண்டும் என கூறுவதை மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் சிரிக்கிறார்கள்.
ஒன்றிய அரசு கொடுக்கும் அழுத்தத்திற்கு மத்தியிலும் தொடர்ந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என ஸ்டாலின் பேசியது குறித்து கேட்டபோது..,
அழுத்தம் கொடுப்பது யார் எல்லா விஷயங்களையும் அரசியல் செய்வது இவர்கள்தான். ஆட்சியில் அரசியல் செய்தவர்கள் எல்லாம் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும், தெலுங்கானாவில் எதிர்த்து கொண்டார்கள். அதனால் தான் தெலுங்கானாவில் மறுபடியும் அவர்கள் வருவதை மக்கள் தடுத்தார்கள். மக்களுக்கான திட்டங்களை அனுமதி இல்லை. அனைத்திலும் ஈகோ பார்க்க கூடாது. முதல்வர் திட்டத்தை அறிவித்தால் பெயர் மாற்றி, இவர்கள் ஒரு திட்டத்தை அறிவிக்கிறார்கள். பாலியல் குற்றங்கள் சட்ட விதிமீறல்கள் போன்றவற்றை மறைக்க பார்க்கிறார்கள். செல்வபெருந்ததை கருப்புக்கொடி காமிக்க போவதாக கூறுகிறார்கள். அப்படி என்றால் இவர் திமுக தலைவர் செல்லும் இடங்களுக்கு தான் கருப்பு கொடி காமிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் செல்வேன் என செல்வபெருந்ததை கூறுகிறார். உடனடியாக மு.க.ஸ்டாலின் செல்ல வேண்டாம் என தெரிவித்ததும், தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். செல்வபெருந்தகையின் தலைவர் ஸ்டாலினா? சோனியா காந்தியா? என்ற சந்தேகம் அவர்களின் கட்சி தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது. முதலில் அவர்கள் கட்சி நிலைப்பாடை பார்க்கட்டும்.
அமித்ஷா கட்சிப் பணிகளுக்காக வருகிறார். தற்சமயம் அறிவிப்புகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை அரசு பணியாக வரும் பொழுது கண்டிப்பாக அறிவிப்புகள் இருக்கும் எனக்கூறி கோயம்புத்தூரில் நடைபெற இருக்கும் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

