கேட்ட வரம் தரும் கோட்டாறு புனித சவேரியார் தேவாலயத்தில் ஆண்டு பெருவிழாவின் 9 ஆம் நாள் திருவிழாவினை முன்னிட்டு நேற்று இரவு தேர் பவனியும் பக்தர்களின் கும்பிடு நமஸ்காரமும் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கும்பிடு நமஸ்காரம் செய்து பிரார்த்தனைகளும் செய்தனர். பத்தாம் நாள் திருவிழாவான இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் தேவாலயம் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு தேவாலயம். இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஆண்டு பெருவிழா கோலாகலமாக பத்து நாட்கள் கொண்டாடபடுவது வழக்கம் .
இந்த ஆண்டிற்கான ஆண்டு பெருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. பத்து நாட்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது. 9ஆம் நாள் திருவிழாவினை முன்னிட்டு நேற்று இரவு தேர் பவனியும் பக்தர்களின் கும்பிடு நமஸ்காரமும் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கும்பிடு நமஸ்காரம் செய்து பிரார்த்தனைகளும் செய்தனர். பத்தாம் நாளான திருவிழாவான நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.