• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் மாட்டு வண்டி பந்தயம்..,

ByS. SRIDHAR

Apr 15, 2025

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வம்பன் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாஞ்சான் விடுதி கொத்தகோட்டை ஊராட்சி பொதுமக்களால் நடத்தப்படும் 67 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பெரிய மாடு சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 17 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
சீறி பாய்ந்து கொண்டு ஒன்றை ஒன்று முந்தி சென்ற மாட்டு வண்டிகளை சாலையின் இரு புறங்களிலும் இருந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் முதல் பரிசு 50 ஆயிரம் இரண்டாம் பரிசு 40 ஆயிரம் உள்ளிட்ட மொத்தம் எட்டு ரொக்க பரிசுகளும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.