



புதுக்கோட்டை மாநகர பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக கோவில்பட்டி திரிசூலம் பிடாரியம்மன் ஆலயம் திகழ்கிறது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு பூச்செரிதல் விழா நடைபெறும் இந்த வழக்கம்போல் நடைபெற்ற பூச்செரிதள் விழாவில் புதுக்கோட்டையைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை பூ பல்லாக்கு எடுத்தும் பூத்தட்டுகளை கையில் ஏந்தியும் அரோகரா கோஷத்துடன் ஆலயம் நோக்கி வந்தடைந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

மேலும் திரிசூலம் பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாதாரணை காண்பிக்கப்பட்டது.

