• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ.வி போக்சோ நீதிமன்றம் அதிரடி..! முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை..

Byகுமார்

Sep 18, 2021

இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி ரெட்டியபட்டியைச் சேர்ந்த நடராஜன் (வயது 57) ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் தனக்குச் சொந்தமான காலி இடத்தில் அறை அமைத்து இருந்துள்ளார். அப்பொழுது காலி இடத்திற்கு அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 6 மற்றும் 7 வயதுள்ள 2 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை நடராஜ் ஆசை வார்த்தை கூறி 28.11.2016 மற்றும் 30.11.20016 ஆகிய இரண்டு நாட்கள் அழைத்து பாலியல் தொல்லை தந்ததோடு மட்டும் இல்லாமல், இதை வெளியே யாரிடமும் கூறினால் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். சிறுமிகளின் பெற்றோர் தந்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜை கைது செய்தனர். இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கே.தனசேகரன் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் நடராஜ்க்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் தலா ரூபாய் 14 லட்சம் நிவாரணம் வழங்கவும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.


நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த முன்னாள் ராணுவ வீரர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து 60 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சம்பவம் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.